டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, தனது எக்ஸ் தளத்தில், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்புவதாகவும் தேசத்தையும் காந்தியையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Related posts
Click to comment