திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் பேரளம் காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய முயற்சித்தபோது, காரை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 750 மி.லி அளவுடைய 600 பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 600 மதுபாட்டில், மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீசார் வழக்குப் பதிந்து வெளிமாநில மது பாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்,? காரின் உரிமையாளர் யார்.? மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த கடை உரிமையாளர் யார்.? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related posts
Click to comment