ஏமனைச் நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதியை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தலால் அபு மஹதி நிமிஷா பிரியாவின் பணத்தை தொழில் ரீதியாக ஏமாற்றி அவரது பாஸ்போர்டையும் பறித்து வைத்துக் கொண்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த கொலை வழக்கில் தான் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஜூலை 16) அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. எனினும் அதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் ஒருவரின் உத்தரவின் பேரில் ஏமனை சேர்ந்த சூஃபி முஸ்லிம் தலைவர் மூலமாக தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையடுத்து, நிமிஷா பிரியாவின் தண்டனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பத்திருந்தது. நிமிஷா தரப்பினா் வழங்கும் இழப்பீடு பணத்தை மஹதி குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வது தொடா்பான இறுதி முடிவை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகங்கள் சமூக வலைதளங்களில் தலால் அபு மஹதி குடும்பத்தினர் ஷரியத் சட்டடத்தின் படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு கருணை காட்டும் அடிப்படையில், அதிக பணத்தை விரும்புவதாக நிமிஷா குடும்பத்தினர் கூறி வருவருவதாக எழுந்த சர்ச்சையால் உயிரிழந்த தலால் அபு மஹதி சகோதரர் நிமிஷா பிரியாவை மன்னிக்க மறுத்துவிட்டார்.
நிமிஷாவைக் காப்பற்றும் முயற்சியில் பின்னடைவாக கருதப்படுகிறது.
Related posts
Click to comment