ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரனிடம்1 மணி நேரம் குறுக்கு விசாரணை.. மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், வேட்பு மனுவில் சொத்து உள்ளிட்ட விவரங்களை மறைத்ததாகக் கூறி, அவரை எதிர்த்து போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் இவ் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ராபர்ட் புரூஸுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், அவர் மீதான் வழக்கு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்த நயினார் நாகேந்திரன், ஏறத்தாழ 19 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் அவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நீதிமன்றத்தில் 1 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் ஜூலை 2ஆம் தேதி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.