புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்.! தவெக மா.செயலாளர்கள் கட்சி தாவ திட்டம்.? விஜய் அதிர்ச்சி.!?


புஸ்ஸி ஆனந்த் பேச்சால் தவெகவில் உட்கட்சி பூசல் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கிறது.

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதிலிருந்தே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் மக்களை மதிப்பதில்லை அவர்களை சந்திப்பதில்லை, டிவிட்டர் அரசியல்வாதி என்றெல்லாம் அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். அதற்கு ஏற்ப அவரது நடவடிக்கைகளும் அமைந்திருந்தது.

கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான போது அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய விஜய் உடனிருந்து ஆறுதல் கூட சொல்லாமல் மின்னல் வேகத்தில் சென்னை வந்து சேர்ந்தார். இதனால் அவர்மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

அந்த துயர சம்பவம் குறித்து மௌனம் காத்துவந்த விஜய் 3 நாட்கள் கழித்து அறிக்கை இறந்துபோன 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் சொன்னது என தொடர்ந்து விஜய் சர்ச்சையில் சிக்கினார்.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் கிடைக்காமல் சிக்கல் எழுந்தது. தன்னை வைத்து ஜனநாயகன் படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மௌனம் காத்த விவகாரத்தில் திரைத்துறையினர் மத்தியிலேயே சலசலப்பு ஏற்பட்டது தன்னை வைத்து படம் தனது படத்தின் தயாரிப்பாளருக்காக கூட குரல் கொடுக்காத விஜய் எங்கிருந்து தமிழக மக்களுக்கான அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார் என்ற கேள்வியும் பொதுவெளியில் உலா வந்தது.

கட்சி விவகாரங்களில் உழைப்பவர்களுக்கு தரவேண்டிய மரியாதையை பதவியை தர மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கு உதாரணமாக தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னெல் விவகாரத்தை முன்நிறுத்துகின்றனர். தனக்கு பதவி கொடுக்காததால் விஜய்யின் காரை மறித்து முறையிட சென்றார். அவரை ஒரு பெண் என்றும் பாராமல் விஜய் உதாசீனப்படுத்திவிட்டு சென்றார். இதனால் தொடர் மன உளைச்சலால் அந்த பெண் தற்கொலை முயற்சி செய்த போதும், விஜய்யோ கட்சி நிர்வாகிகளோ அஜிதாவுக்கு ஆறுதல் சொல்ல மருத்துவமனைக்குக் கூட செல்லவில்லை.

விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு முன்பே பலர் விஜய் மக்கள் இயக்கத்தில் சொந்த பணத்தைப் போட்டு நிறைய நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் உரிய பதவியோ மரியாதையோ கிடைக்கவில்லை என்பதால் பலர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தவெக சார்பில் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 10-ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்ததாம். அப்போது சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கெல்லாம் மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அங்கு நிறுத்தப்படும் வேட்பாளரை தளபதி விஜய்யாக கருதி அவரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என கூறினாராம்.

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்ற அறிவிப்பால் கலங்கி போயுள்ள மாவட்டச் செயலாளர்கள் தவெகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனராம். மாவட்ட நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களோடு கூண்டோடு விலகி, வேறு கட்சிக்குச் செல்லலாம் என்ற முடிவில் உள்ளனராம். இந்த தகவல் அக்கட்சித் தலைவர் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். தவெக தொண்டர்களும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கின்றனராம்.


banner

Related posts

சக்தித் திருமகன் பட பாடல் நாளை வெளியீடு – விஜய் ஆண்டனி

Admin

நேபாளத்தில் வெடித்த போராட்டம் : துப்பாக்கி சூட்டில் 16 பேர் பரிதாப பலி, ஊரடங்கு உத்தரவு அமல்!

Ambalam News

என்னை நீக்கியது மகிழ்ச்சி தான்! – செங்கோட்டையன் பளீர்.!

Ambalam News

Leave a Comment