ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம் முத்துப்பேட்டை கிராமத்தில், சில வாரங்களுக்கு முன்பு நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி என்ற முதியவர் மனு அளித்திருந்தார். தனது மனு மீது பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்;, சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் வெங்கடபதி முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளிடம், தனது மனு மீது என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது மனுவிற்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீனும், அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் திருவேங்கடத்தை அடித்து உதைத்ததோடு, காவல் துறையினரை அழைத்துள்ளனனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் முதியவர் பிரபாகரனை தாக்கி துரத்தியிருக்கிறார்.
மக்கள் அளிக்கும் மனு மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பொதுமக்களை தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம். மேலும் முதியவர் வெங்கடபதி ஆக்கிரமிக்கப்பட்ட அரசு வன நிலத்தை மீட்க கோரி மனு கொடுத்திருக்கிறார். முதியவர் வெங்கடபதி சமூக ஆர்வலர் என்றும் கூறப்படுகிறது.
முதியவர் வெங்கடபதியை காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மனித தன்மையற்ற செயல் பேசுபொருளாகியிருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து பாமக அன்புமணி ராமதாஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், கிராம நிர்வாக அலுவலரை நீண்ட நேரமாக பணி செய்யாவிடாமல் தடுத்து தாக்கியதால், முதியவரை குறைந்த அளவு பலத்தை கொண்டு உதவி காவல் ஆய்வாளர் அமைதிபடுத்தினார் காவல்துறை சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகலை விசாரித்து, முதியவர் எது தொடர்பாக மனு கொடுத்திருந்தார்.? அவர் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.? என்பதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா.? என்று சமூக ஆர்வலர்கள் கேள்விகேட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பதில் சொல்வாரா.?
Related posts
Click to comment