பாஜக அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் – எம்.பி. சசிகாந்த் செந்தில்



ஏழை மற்றும் எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க நான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, எங்கள் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன்.
மத்திய பாஜக அரசு, தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்களின் கல்வி உரிமைகளையும், கனவுகளையும் அழித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாஜக அரசு தொடர்ந்து இழைத்து வரும் அநீதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும், கடந்த நான்கு நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டேன். இந்தப் போராட்டம் தற்போது பொது விவாதத்திற்குரிய பொருளாகி, பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.
இருப்பினும், தமிழக மக்களுக்காக எழுப்பப்பட்ட நியாயமான கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு செவிமடுக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும், பாஜக அரசு தனது சர்வாதிகாரத்தையும், ஆணவத்தையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்த தமிழ் விரோத நடவடிக்கைகளை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பாஜக எப்போதும் தமிழ் விரோத அணுகுமுறையையே பின்பற்றி வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இதை நான் நன்கு அறிந்திருந்தேன், இது அவர்களின் இயல்பு.
வரவிருக்கும் நாட்களில், தமிழகமும் தமிழ் மக்களும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க பாஜகவை உறுதியாக எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.
மக்களின் பிரச்சனைகளுக்கு துணை நின்று, அவர்களின் இன்னல்களுக்கு எதிராகப் போராடுவதும், சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்பதால், எதிர்காலத்தில் நாம் நடத்த வேண்டிய பெரிய போராட்டங்களுக்கு இந்த உண்ணாவிரதம் முன்னோடியாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


banner

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Ambalam News

ஜாமீனில் தலைமறைவான மீராமிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..

Ambalam News

இராமேஸ்வரத்தில் விரைவில் ஏர்போர்ட்..

Ambalam News

Leave a Comment