தமிழகம் முழுவதூம் தெரு நாய்களால் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கும் துன்பத்திர்க்கு ஆளாகியிருக்கின்றனர். வாகனங்களில் செய்வோரை திருநாய்கள் துரத்துவதால் தினந்தோறும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். வெளிய்ர் சென்றுவிட்டு இரவு நேரங்களில் தனியாக வரும் பொதுமக்கள் படும் துன்பத்திர்க்கு அளவில்லை. தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் எப்போதாவது நடவடிக்கை எடுப்பதோடு கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி, நகரம் முழுவதும் தெருவிலுள்ள நாய்களுக்கு எதிராக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் புதிய திட்டத்தை ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்குகிறது. 50 நாட்களில் 1.5 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. இதற்காக, கால்நடை மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாய்கள் தங்களது வசிப்பிடமான தெருக்களுக்கே மருத்துவக்குழுக்கள் நேரில் சென்று அவற்றுக்கு தடுப்பூசி செலுத்த இருக்கின்றனர். இதன் மூலம், இதுவரை பின்பற்றப்பட்ட திட்டங்களான, நாய்களை பிடித்து சென்று தடுப்பூசி செலுத்தும் முறைக்கு மாற்றாக, நேரடியான அணுகுமுறையை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Related posts
Click to comment