திருப்பூர் அவிநாசியில் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் தனது தந்தைக்கு உருக்கமாக தன் நிலை குறித்து அலைபேசியில் பதிவு செய்துவிட்டு, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
இதன் காரணமாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமுர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தை நாட்டினர்.
திருப்பூர் நீதிமன்றம் இவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவர்களது ஜாமீன் மனு மீது பதில் தர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.