முன்னாள் அதிமுக எம்,பி அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார் – அதிமுகவினர் அதிர்ச்சி..


ராமநாதபுரம் மாவட்டாம் மண்டபத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். 1986 முதல் வெற்றியோ தோல்வியோ அதிமுகவை விட்டு அணி மாறியதில்லை.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டவர்.

1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். திமுக ஆதரவு அலை வீசிய அந்த தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அந்த தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஆளுமையாக அரசியலில் தடம் பதித்தார் அன்வர் ராஜா.

அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். 15 பேரில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜா ஜெயலலிதா ஆகிய இருவருமே அந்தளவுக்கு அன்வர்ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர், ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். அமைச்சர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலா அணியில் இணைந்தார். பிறகு, எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான பேசியதால் அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்கவில்லை.

இருப்பினும், அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என பேசி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக-அதிமுக கூட்டணி, உட்கட்சி பூசல், எடப்பாடி பழனிச்சாமி தன்மீது எடுத்த நடவடிக்கை, போன்றவற்றால் அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா இன்று காலை திடீரென அண்ணா அறிவாலயம் வந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.










banner

Related posts

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்..

Admin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் பங்கேற்கிறார்..

Ambalam News

‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் அதிகாரிகளுடன் அடிதடி – சிகிச்சையில் இருப்பவரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.?

Ambalam News

Leave a Comment