போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்


போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படு என 1987ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஐ.நா பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அன்று முதல் போதைப் பொருள் பயன்பாடு தடுப்பில் பல்வேறு நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படு என 1987ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஐ.நா பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் போதைப் பொருள் பயன்பாடு தடுப்பில் பல்வேறு நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

2024 மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கேரளாவில் சுமார் 27 ஆயிரம் வழக்குகள் போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தொடர்பாக பதியப்பட்டுள்ளன. இது பஞ்சாப் மாநிலத்தின் ஒன்பதாயிரம் வழக்குகளுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போதைப் பொருள் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க NAPDDR செயல்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஆர்வலர்கள் மூலம் 15 கோடி மக்களுக்கு போதைப் பொருள் ஏற்படும் சமூக சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க 350 மையங்கள் நாடு முழுக்க செயல்பாட்டில் உள்ளன. 14446 என்ற எண் பயன்படுத்தி ஆலோசனை பெறலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் போதைப் பொருள் தடுப்பு படை ANTF செயல்பட்டு வருகிறது.

போதைப் பொருள் அற்ற மனித சமூகத்தை உருவாக்குவது நமது இலக்கு இந்தவகையில் நாடு முழுவதும் போதைப்பொருள் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. இராமநாதபுர மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப.,அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ். .கா.., அவர்கள் உடனிருந்தார். நாமும் போதைப்பொருள் கடத்தல் பயன்படுத்துதல் பதுக்குதல் குறித்த தகவல்களை அரசுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

-கர்ணன்


Related posts

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

பஹல்காம் தாக்குதல் என்ன செய்யப்போகிறது பா.ஜ.க.

Admin

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்தை தொடர்ந்து விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா.!

Admin

Leave a Comment