பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்


திமுக மா.செ.கூட்டம் – பாஜக அதிமுக கூட்டணி

பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அனைத்து அரசியல் கட்சியினரும் கட்சிப்பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். தற்போது, திமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் “வரும் ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் காலை 10:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய முடிவுகள் பற்றியும் வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் மற்றும் கட்சி அமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதுதொடர்பாகவும், தேர்தல் பிரச்சார பணிகளை முடுக்கி விடுவது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசியுள்ளார்.

கூட்டம் தொடங்கிய பின்னர், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கும், கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, வருகின்ற வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், “நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்

பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம். ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்” என்று உரையாற்றியுள்ளார்.


Related posts

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்

Admin

Leave a Comment