ஆர்.கே. ஜூவல்லரி என்ற நகைக்கடையின் மேலாளர் பிரதீப்ஷாட் இவர் 10 கிலோ தங்க நகைகளுடன் திண்டுக்கல்லில் இருந்து காரில், சென்னை திரும்பிய போது, வழியில் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
திருச்சியில் நேற்று நள்ளிரவு நேரத்தில், காரில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவ,ம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருச்சி சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
சென்னை சவுகார்பேட்டையில் ஆர்.கே. ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இயவ்ராகள் தங்க நகைகளை மொத்தாம நகைக்கடைகளுக்கு விர்ப்பதாக கூறப்படுகிறது. வியாபாரம் செய்வதற்காக, கடையின் மேலாளர் பிரதீப்ஷாட், இரண்டு ஊழியர்களுடன் திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை விற்பதற்காக காரில் சென்றுள்ளார். விற்பனைக்குப் பிறகு, எஞ்சிய 10 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, நேற்று இரவு சென்னைக்குத் திரும்பியிருக்கின்றனர். காரில் டிரைவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் இருந்துள்ளனர்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகேயுள்ள கீழவங்காரம் என்ற இடத்தில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளனர். மேலாளர் பிரதீப்ஷாட் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது, அவர்களது வாகனத்திற்கு பின்னால் வந்த, மற்றொரு காரில் இருந்து இறங்கிய நான்கு மர்ம நபர்கள், திடீரென காரின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்தவர்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர். மேலாளர் பிரதீப்ஷாட் முகத்திலும் மிளகாய்ப் பொடியை வீசி நிலைகுழய செய்துள்ளனர்.
கண் எரிச்சலில் அவர்கள் அலறியபோது, மர்ம நபர்கள் காரில் இருந்த இரண்டு பைகளில் வைத்திருந்த 10 கிலோ தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய காரில் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து நகைக்கடை மேலாளர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருச்சி எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், கொள்ளையர்களைப் பிடிக்க, சமயபுரம் காவல் ஆய்வாளர் ரகுராமன், மற்றும் ஆய்வாளர்கள் குணசேகரன், கண்ணதாசன், வீரபாண்டியன் ஆகிய நான்கு பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், குற்றவாளிகளை தனிப்படை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கூறப்படுகிறது.
மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் நகைக்கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா.? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.