திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடி நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும், ஆம்னி பேருந்தில் கோடிக்கணக்கில் பணம் எடுத்து செல்வதாக சென்னை வருமான வரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் ஆத்தூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் ரெடியாக நின்றனர்.
ஆத்தூர் சுங்கச்சாவடியில் அந்த பஸ்ஸை போலீசார் உதவியுடன் மறித்து சோதனை நடத்தினர். இதில் கணேசன் என்பவரிடம் ரூ.4 கோடியும், அம்புரோஸ் என்பவரிடம் ரூ.50 லட்சமும் கைப்பற்றப்பட்டது. இருவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related posts
Click to comment