தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கிராமத்து பின்னனியில் படம் உருவாகும் நிலையில் இதுவரை வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடந்தது.

இந்த நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு விரைவில் ஒரு அப்டேட் வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுமையான கதைக்களம் என்பதால் தனுஷ் ரசிகர்களையும் தாண்டி மக்களிடையே ஆர்வத்தை துண்டியுள்ளது தனுஷின் இட்லிகடை திரைப்படம்