தாயைக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை

2017-ம் தஷ்வந்த் ஆண்டு சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, இக்குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். பெற்றோர்கள் மாங்காடு போலீசில் அவரது புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலை காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றது விசாரனையில் தெரியவந்தது. இந்த பகீர் சம்பவம் தமிழக்கத்தையே உலுக்கியது.

வழக்கை விசாரித்த போலீசார் தஷ்வந்தை கைது செய்து பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு, அவரது நகைகளுடன் தப்பியோடி தலைமறைவானார். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அவர் மும்பையில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த வழக்கை அடுத்து, தாய் சரளாவைக் கொலை செய்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வகையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறியதால் இந்த கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லையென்று கூறி தாயைக் கொலை வழக்கில் இருந்து தஷ்வந்தை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. இருப்பினும், சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த், சிறையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

மண் கடத்தல் லாரிக்கு லஞ்ச பேரம் பேசிய டிஎஸ்பி

Admin

வேண்டும் வாரம் தரும் விநாயகர் – வழிபாட்டு முறை

Admin

சிறுவாணி தண்ணீர் மாதிரி சுத்தமான ஒரு ஆட்சி ஆட்சியா! இருக்கும் – விஜய்

Admin

Leave a Comment