மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்..
தமிழக அமைச்சரவையில் மாற்றம் :
நீதிமன்ற கெடுபிடியின் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், ஆபாச பேச்சு கண்டனங்களால் அமைச்சர் பொன்முடியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கு இணங்க தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இரு அமைச்சர்களும் கவனித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு கூடுதலாக கவனிக்கும் பொருட்டு பிரித்து கொடுத்துள்ளார் முதல்வர் மு.க, ஸ்டாலின்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத் துறையும், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் பொன்முடி வசம் இருந்த வனத்துறை பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி இன்று மாலை அவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.