வேண்டும் வாரம் தரும் விநாயகர் – வழிபாட்டு முறை

விக்கினங்களைத் தீர்ப்பவன் விநாயகனே. விநாயகன் என்றாலே தனக்கு மேலே தன்னை இயக்க ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள், விநாயகப் பெருமானே பரம்பொருள், விநாயகனே சிவபெருமான் விநாயகனே இறைவன் அவனே அனைத்தும் அதனால் தான்

எந்த  ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் கணபதியை வணங்கி விட்டுத் தொடங்கவேண்டும் கூறுகின்றனர்.. எழுதத் தொடங்கும் போது கூட, பிள்ளையார் சுழி போட்டுத் தான் எதையும் தொடங்குவார்கள். இன்றும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

ரிக் வேதத்தில் தொடங்கி பல ஆகமங்களில் புராணங்களில் பல இடங்களில் கணபதியைப் பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன

விநாயகனே ஓங்கார வடிவம். இவரை வணங்கினால் கலை, குணம் எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்க வேண்டிய அவசியமில்லை.ஆனத்தும் எளிதில் கைகூடும்

விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி,  சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந்தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்

யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார்  ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

தன்னை வழிபடுவோரின் விக்கினங்களை அதாவது இடையூறுகளைப் போக்குவதால் விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்கள் அணைதிற்கும் தலைவராயிருப்பதால் கணநாதன் மற்றும் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

நிவேதனம்

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம்.அருகம்புல்வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம்பெருகும்.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

எதிர்மறை ஆற்றல் தடைகளை அகற்றும் விநாயகர் வழிபாட்டு முறை

நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அல்லது துவங்கும் காரியங்கள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளி போய் கொண்டே இருக்கும். கை கூட வரப்போகும் நேரத்தில் நடக்காமல் தள்ளி போய் விடும். எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தடை, தாமதங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் சில காரியங்கள் இனி நடக்கவே நடக்காது என்ற முடிவிற்கு கூட வந்திருப்போம்.

இதற்கு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களே காரணம் என சொல்லப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகினால் தானாக நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தடைகள் அனைத்தும் விலகுவதற்கு முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

நடக்கவே நடக்காது, இனி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற காரியங்களும், பல்வேறு தடைகளால் தள்ளி போய் கொண்டே இருக்கும் காரியங்களும் கூட விநாயகருக்கு ஒரு குறிப்பிட்ட முறையில் பூஜை செய்து வழிபட்டால் உடனடியாக நடைபெறும். இந்த எளிய விநாயகர் வழிபாடு காஞ்சி மகா பெரியவா தனது பக்தர்களுக்கு போதித்த வழிபாட்டு முறையாகும்.

காலையில் சுத்தமாக குளித்து விட்டு, வீட்டில் உள்ள விநாயகர் படம் அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் தொட்டு பொட்டு வைத்து, அவர் முன் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அது நெய் தீபமாகவோ அல்லது நெலேண்ணெய் தீபமாகவோ இருக்கலாம். நாம் விளக்கேற்றும் திரியுடன் வெற்றிவேரை சேர்த்து திரித்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். பிறகு ஏதாவது ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் முன் வைத்து, விநாயகருக்கு அருகம்புல் சாற்ற வேண்டும். பிறகு அவருக்கு உரிய காயத்ரி மந்திரத்தை எட்டு முறையோ அல்லது 108 முறையோ சொல்லி வழிபட வேண்டும்.

விநாயகர் காயத்ரி மந்திரம்

“ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்”


இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய வேண்டும். ஒரு நாள் கூட தடை இல்லாமல் இந்த வழிபாட்டை தினமும் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை எந்த கிழமையில் வேண்டுமானாலும் துவங்கலாம். முதல் நாள் சாற்றிய அருகம்புல்லை எடுத்து, கால் படாத இடத்தில் வைத்து விட்டு, மறுநாள் புதிதாக அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும். ஏழு நாட்கள் இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு, அடுத்த வேண்டுதலை முன்வைத்து வழிபட வேண்டும்

பொதுவாகவே விநாயகர் பெருமான் வினைகள், தடைகள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சியை தரக் கூடியவர். அதே போல் வெற்றிவேர், எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் சக்தி கொண்டதாகும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வெற்றிவேருடன், விநாயகருக்கு விருப்பமான அருகம்புல்லையும் சாற்றி வழிபடுவதால் நம்முடைய வேண்டுதல்கள் ஏழு நாட்களிலேயே நிறைவேறும்.

விநாயகர் காயத்ரி மந்திரம் தடைகளை நீக்கி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை காலையில் சொல்லி வந்தால் மிகப் பெரிய மாற்றங்கள் வாழ்வில் நிகழ்வதை காண முடியும். தினமும் காலையில் விநாயகரை தரிசித்து உங்கள் செயல்களை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

Related posts

பஹல்காம் தாக்குதல் என்ன செய்யப்போகிறது பா.ஜ.க.

Admin

வழக்கு முடியும் வரை செந்தில்பாலாஜி அமைச்சராகக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை

Admin

இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin

Leave a Comment