திமுக அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினாலே சர்ச்சைதான் என்ற அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார். கடந்த காலங்களில் திமுக அதிமுக மேடைப்பேச்சாளர்கள் பேசாத ஆபாச பேச்சா? இருப்பினும் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா, கடந்த 6 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது விழாவில் பேசிய பொன்முடி நான், 1984ல் திமுகவில் இணைந்ததாக இங்கு பேசிய இயக்குனர் தெரிவித்தார்; அது தவறு.கடந்த 1971ல், நான் அண்ணாமலை பல்கலையில் படித்து கொண்டிருந்த போது, திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தில் இருந்தவன். படித்து முடித்து கல்லுாரி பேராசிரியராக பணியாற்றினேன்.

அப்போது ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ பட்டிமன்றங்கள் நடத்தப்படும். பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா..? ‘கடவுள் கொள்கையை பரப்புவதில் காமச்சுவை அதிகம் கையாண்டது சைவமே, வைணவமே’ என்பது தான். அந்த பட்டிமன்றங்களுக்கு, செல்வேந்திரன் நடுவர்; நானும், சபாபதி மோகனும் பேசுவோம்.
காமச்சுவை பரப்புவது குறித்து இங்கே பேசலாமா.? இங்கு பெண்கள் கொஞ்சம் பேர் உள்ளனர்; பெண்கள் யாரும் தவராக நினைக்க வேண்டாம்.
ஆபாசஅச்சிடத் தகாத பேச்சு
விலை மாது வீட்டிற்கு ஒருவன் போகிறான். அந்த வீட்டில் இருந்த பெண், அவனிடம், ‘நீங்கள் சைவமா.? வைணமா ? எனக் கேட்டார்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘பணம் இவ்வளவுன்னு கேட்டால் சரி… என்னடா? இது, சைவம?, வைணவமா? எனக் கேட்கிறாரே…’ என, அவன் குழம்புகிறான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா இப்படி , (நெற்றியில் பட்டை போடுவது போல் சைகை காட்டுகிறார் )படுத்துக்*** (அச்சிடத் தகாத ஆபாச வார்த்தை) வைணவம்னா (நாமம் போடுவது போல் சைகை காட்டுகிறார்) நின்னுக்கிட்*** (அச்சிடத் தகாத ஆபாச வார்த்தை) நின்னுக்கின்***னா அஞ்சு, படுத்தா *** 10 ) என சொன்னார். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இவரது பேசிய வீடியோ வைரலான நிலையில் திமுக வினர் உட்பட.பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
பொன்முடியின் பேச்சிற்கு கண்டனங்கள்
பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: பெண்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: பொறுப்பற்ற பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம். நீண்ட அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து கருத்துக்களை பொது கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இனியும் அமைச்சர் பதவியில் பொன்முடி நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்
வி.கே.சசிகலா: அமைச்சர் பேசி 5 நாட்கள் கழித்து கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது திமுகவினரின் கண் துடைப்பு நாடகம். அவர் மீது உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டனங்களுக்கு சிகரம் வைத்தாற்போல, பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், ‘இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என தி.மு.க எம்.பி கனிமொழியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

திமுகவுக்கு நெருக்கடி – முதல்வரின் நடவடிக்கை
இது திமுக விற்கு கடும் நெருக்கடியான சூழலை உருவாக்கியது ஏற்கனவே “உச்சநீதிமன்றத்தின் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் ஏப்ரல் 28 திங்களுக்குள், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட நெருக்கடியான நிலையில், பொன்முடியின் ஆபாச பேச்சால் அடுத்த நெருக்கடி உருவாகி விட்டதை உணர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வனத்துறை அமைச்சகத்துக்கு பொறுப்பு வகிக்கும் பொன்முடியை திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஏப்ரல் 11 ம் தேதி உத்தரவிட்டார். மேலும் தனது அமைச்சர் பதவியை பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 24 ஆம் தேதி பொன்முடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் அனுப்பினார். இதனால் பொன்முடி அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தார் என்கிறார்கள்.
பொன்முடியின் புலம்பல்
இதுகுறித்து பொன்முடி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், ‘என்னுடைய அந்தப் பேச்சு தவறு என்று பொது மன்னிப்பு கேட்டு விட்டேன். அதற்கு முன்பே என்னுடைய துணைப் பொதுச் செயலாளர் என்ற கட்சிப் பதவியை பறித்துவிட்டார்கள். இப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? என்று தனது மனக்குமுறளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திட கால அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் தரப்பிலிருந்து அவகாசம் எல்லாம் தர முடியாது, என்று கடுமையாக எச்சரித்துள்ளனர். இதையடுத்து பொன்முடி தரப்பில் இருந்து தங்கள் மனக்குமுறல்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக பொன்முடி ஆதரவாளர்கள் வாயிலாக செய்திகள் கசிகிறது.

இது பற்றி திமுக மேல்மட்ட வட்டாரங்களை விசாரித்த போது, ‘அமைச்சர் பொன்முடியின் அந்த ஆபாச பேச்சு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் மூத்த அமைச்சர்களையும் மிகக் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது. அதேபோல ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வரும் முதலமைச்சரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களையும் பொன்முடியின் இந்த பேச்சு கோபப்படுத்தி இருக்கிறது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோவது உறுதி என்று தெரிவிக்கின்றனர்.
பொன்முடி விவகாரத்தில் உயர்நீதி மன்றம் உத்தரவு
பெண்களை இழிவுபடுத்தியதாக அவருக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், “மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தைப் பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது.

அமைச்சர் பொன்முடி மீது புகார் அளித்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, பதவிப் பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், “மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவற்றை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.. இதனை மனுதாரர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மேலும், வழக்கு தொடர்பாக ஜூன் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். அதற்குள் அமைச்சர் பொன்முடி பதவி விவகாரம் தொடர்பாக ஒரு முடிவு கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
யாகாவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாகாப்பர் சொல்லிலுக்குப் பட்டு,
என்பதை அமைச்சர் பெருமக்கள் புரிந்து கொண்டு பதவிக்கு ஏற்றவாறு கண்ணியத்துடன் பேசுவது நல்லது.
– அம்பலம் செய்தி குழு